தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டமானது பிரதான கட்டங்களான தணித்தல், ஆயத்தமாயிருத்தல், அவசர நடவடிக்கைகள், மற்றும் நிவாரணம், மீட்பு மற்றும் மீள்நிர்மாணம் போன்ற அனர்த்தத்திற்கு பிந்திய நடவடிக்கைகளின் நோக்கமான நடவடிக்கைகளுக்கான முழுதான வழிகாட்டல் ஆவணமாகும். மேற்குறிப்பிட்ட கட்டங்களில் பயிற்சி, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் கல்வி ஆகியவையும் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தை உபதேசிய (மாகாண மற்றும் மாவட்ட) நிர்வாக உத்தியோகத்தர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பொருத்தமான உத்தியோகத்தர்கள், சமூகத்தலைவர்கள், தனியார்துறை, சிவில் சமூகம், தொழில் வாண்மை நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் ஆகிய அனைத்துப் பங்காளர்களும் பயன்படுத்துவார்கள்.
தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டமானது தொடர்பான தேசிய கொள்கைகளிலான ஏனைய திட்டங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும். சட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி விடயங்களை உள்ளடக்கியதாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கான திட்டங்களும் கொள்கைகளும் திட்டத்தை தயாரிக்கும்போது உச்ச சாத்தியமான அளவுக்கு கவனத்தில் கொள்ளப்பட்டது. நடைமுறைப்படுத்தப்படும்போது அடையாளம் காணப்பட்ட குறைகளை இந்த திட்டங்களும் கொள்கைகளும் கவனத்தில் கொண்டன. மாகாண, உள்ளூராட்சி, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம அதிகாரி மட்ட நிர்வாகிகளும் இதற்கேற்ப தமது திட்டங்களைக் கொண்டுள்ளன. அனைத்து நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் அடிமட்ட நிறுவனங்களும் தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்திற்கு ஒத்திசைவான தமது செயற்பாட்டு திட்டங்களைக் கொண்டிருப்பர்.
அனைத்து மட்டங்களிலும் பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்யப்படும் இவ்வாறான அனைத்துத் திட்டங்களும் பின்வரும் பிரிவுகளை உள்ளடக்கியதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் மற்றும் தேசிய அவசர நடவடிக்கைத் திட்டத்துடன் ஒத்திருக்க வேண்டும்.
- இடர் மதிப்பீடு
- அனர்த்த தடுப்பு மற்றும் தணித்தல் திட்டம்
- அவசர எதிர்வினைக்கான அனர்த்த தயார்நிலைத் திட்டம்
- மாற்றுத் திட்டங்கள்
- அனர்த்த புனர்வாழ்வு மற்றும் மீள்நிர்மாண திட்டம்