இலங்கையில் பொருத்தமான அரச முகவர்கள், திணைக்களங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் உள்ளடங்கலான ஏனைய பங்காளர்களுக்கு பயிற்சி, கல்வி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பிரிவு பொதுவாக பயிற்சி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை வழங்கும்.

பிரிவின் வகிபாகம்:

  • பிரிவிற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நிறுவனத் திட்டம் மற்றும் பாதை வரைபடத்திற்கிணங்க மூலோபாய சிந்தனையும் திட்டமிடலும்
  • பாடசாலை மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், அரச அதிகாரிகள், பொதுமக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களிடையே அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அனர்த்த இடர் குறித்து விளக்கமளித்தலும் பொதுவான விழிப்புணர்வை அதிகரித்தலும்
  • பல்கலைக்கழக பாடவிதானத்தில் அனர்த்த இடர் குறைப்பை இணைப்பதனூடாக பல்கலைக்கழக பட்டதாரிகளை பயிற்றுவித்தலும் விழிப்புணர்வூட்டலும்
  • கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் பாடசாலைப் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை உயர்த்துதல்
  • நிபுணத்துவ குழு, பிரதான தீர்மானம் எடுப்போரிடையே பயிற்சி மற்றும் சிறு பாட அலகுகள் ஊடாக அனர்த்த முகாமைத்துவம்/ அனர்த்த இடர் குறைப்பு  குறித்து விழிப்புணர்வை உயர்த்துதல்
  • அதிகாரிகளைப் பயிற்றுவித்தல் மற்றும் பயிற்சி உதவிகள்/உபகரணங்கள் ஊடாக முக்கியமான நிறுவனங்களிடையே திறனளவை வளர்த்தல்
  • தொடர்ச்சியான கல்விப் பாடவிதானத்தில் அனர்த்த முகாமைத்துவப் பயிற்சியை இணைத்தல்
  • அனர்த்த முகாமைத்துவத்துக்கான தேசிய மன்றக் கூட்டங்களை ஒருங்கிணைத்தல்
  • அனர்த்த முகாமைத்துவம், அனர்த்த இடர் குறைப்பு சம்பந்தமான அறிவை வளர்ப்பதற்காக கொழும்பு மற்றும் ஏனைய பிரதேச உள்ளக ஊழியர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தலும் நடாத்துதலும்
  • தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை பிரதிநித்துவப்படுத்தல்
  • பிரிவு/வேலைத்திட்டங்களுக்கான வருடாந்த பாதீடு, திட்டங்களை தயாரித்தலும் நிதிப்பாதீடுகளை கண்காணித்தலும்
  • வேலைத்திட்டத்தின் எதிர்பார்க்கப்படும் வெளியீட்டை வழங்குவதற்காக ஊழியர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தலும் முறையான வேலை செய்யும் சூழலைப் பராமரித்தலும்

அவசர தொடர்புகள்

117
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052