rss

அறிமுகம்

அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) இலங்கையின்  அனர்த்த முகாமைத்துவத்திற்கான பிரதான முகவர் நிறுவனமாகும். இதற்கு, அனைத்து பொருத்தமான பங்காளர்களின் பங்களிப்புடன்  அனர்த்தங்களுக்கான இடர்களைக் குறைப்பதற்கான தேசிய மற்றும் உபதேசிய மட்ட நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான பொறுப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையமானது 2005 இல.13 இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையின் செயற்படுத்தும் முகவராக தாபிக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதான நடவடிக்கைகளாவன: ஆராய்ச்சிகளும் அபிவிருத்தியும், தணித்தல், திட்டமிடல், ஆயத்தமாயிருத்தல், எளிதில் பாதிக்கப்பப்படக் கூடிய  ஏதுநிலை மக்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கைகளை பிரித்துத் தருதல், அவசர எதிர்வினை, நிவாரணங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அனர்த்தத்திற்கு பிந்திய நடவடிக்கைகளை ஏனைய பிரதான முகவர் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளலாகும்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நடவடிக்கைளை நடைமுறைப்படுத்தலையும் ஒருங்கிணைப்பதையும் வசதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மாவட்ட, பிரதேச, கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ செயற்குழுக்கள் தாபிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் அனர்த்த இடர் குறைப்பு நடவடிக்கைகளை உப தேசிய மட்டத்தில் செயற்படுத்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகுகள் தாபிக்கப்பட்டுள்ளன.

நோக்கு

'இலங்கையில் பாதுகாப்பான சமுதாயமும் நிலைபேறான அபிவிருத்தியும்'

பணிக்கூற்று

இயற்கை, தொழினுட்ப மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் இடர்களை முறையான முகாமைத்துவம் செய்வதனூடாக சமுதாயத்திலும் மற்றும் நாட்டிலும்  பாதுகாப்பான கலாச்சாரத்தை உருவாக்குதல்

குறித்த சட்டத்தின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முதன்மை செயற்பாடுகளாவன:

தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தையும் தேசிய அவசர நடவடிக்கைத் திட்டத்தையும், அவசியமேற்படும் நேரத்தில் அவற்றை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்கும் பேரவைக்கு உதவி புரிதல்.

தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தையும்  தேசிய அவசர நடவடிக்கைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளல், மற்றும் ஒரு அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டால் தேசிய அவசர நடவடிக்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நெறிப்படுத்தலையும் ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ளல்.

  • அமைச்சுகள், அரச திணைக்களங்கள் அல்லது பொதுக் கூட்டுத்தாபனங்களால் தயாரிக்கப்படும் பல்வேறு அனர்த்த முகாமைத்துவத் திட்டங்கள் தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்துடன் ஒத்திசைவதை உறுதிப்படுத்தல்
  • 10ஆம் பிரிவின் கீழ் பல்வேறு அமைச்சுகள், அரச திணைக்களங்கள் அல்லது பொதுக் கூட்டுத்தாபனங்களால் தயாரிக்கப்படும் அனர்த்த முகாமைத்துவத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அனர்த்த தயார்நிலை, தணித்தல், தடுத்தல், நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் மீள்நிர்மாண நடவடிக்கைகளுக்கான நிகழ்ச்சிகளை தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும், அவ்வாறான நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைவதும், அவ்வாறான நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்ளலும், அந் நிதியை பொருத்தமான பிராந்தியங்களுக்கு விடுவிப்பதும், மற்றும் இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதும் மதிப்பீடு செய்தலும்
  • அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளில் உரிய நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மாவட்டச் செயலகங்கள், மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் வழங்கலும் அவ்வாறான நிறுவனங்களுடனும் செயலகங்களுடனும் ஒருங்கிணைந்து வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதும் நடைமுறைப்படுத்தலும்
  • அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஆராய்ச்சி  மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தரவுத்தளத்தை தாபித்தலும் பேணுதலும்
  • அதன் நடவடிக்கைகள் தொடர்பாக நேரத்துக்கு நேரம் அல்லது பேரவையால் கோரப்படும்போது மன்றத்துக்கு அறிக்கைகள் சமர்ப்பித்தல்

இந்தச் சட்டம் இலங்கையில் அனர்த்த இடர் முகாமைத்துவம் தொடர்பான கட்டமைப்பையும் வழங்குவதுடன் எதிர்வினையை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறையிலிருந்து அனர்த்த இடர் முகாமைத்துவத்துக்கான ஒரு உயிர்ப்பான அணுகுமுறைக்கான கொள்கை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவத்தை முழுமையாக விளித்து நிற்கும்.

சட்டத்தின்படி பின்வரும் ஆபத்துகள் அனர்த்த முகாமைத்துவ வரம்பின் கீழ் வருகின்றன:

  • வெள்ளங்கள்
  • மண்சரிவுகள்
  • தொழிற்றுறை தீங்குகள்
  • தீ
  • தொற்றுநோய்கள்
  • சுனாமி (ஆழிப்பேரலை)
  • காற்று தீங்குகள்
  • குண்டுவெடிப்புகள்
  • விமானத் தாக்குதல்கள்
  • சிவில் அல்லது உள்நாட்டு கலவரம்
  • இரசாயன விபத்துகள்
  • கதிர்வீச்சு தீங்குகள்
  • எண்ணெய்க் கசிவுகள்
  • அணு அனர்த்தங்கள்
  • நகர மற்றும் காட்டுத் தீ
  • கடலரிப்பு
  • புயல், மின்னல் தாக்கு மற்றும் பலமான இடிமுழக்கம்

2005 ஜுலையில் அனர்த்த முகாமைத்துவ நிலையமானது அனர்த்த முகாமைத்துவத்துக்கான தேசிய மன்றத்தின் கீழ் அதியுத்தம ஜனாதிபதியின் கீழ் செயற்படுவதற்காக தாபிக்கப்பட்டது.

2005 டிசம்பரில் மாண்புமிகு பிரதமரின் கீழ் அனர்த்த முகாமைத்துவத்துக்கான தனியான அமைச்சு தாபிக்கப்பட்டது. 2006 பெப்ரவரியில் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு அதன் வரம்பின் கீழ் மனித உரிமைகளும் அமையும் வகையில் தாபிக்கப்பட்டது. 2006 பெப்ரவரி வர்த்தமானிக்கிணங்க தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் என்பன அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் வரம்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. 2010 இல் தேசிய நிவாரண சேவைகள் நிலையம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைக்கப்பட்டு அமைச்சானது அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எனப் பெயரிடப்பட்டது.

வர்த்தமானி அறிவிப்புக்கிணங்க அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் பின்வருமாறு:

  1. அனர்த்தத் தணிப்பு, எதிர்வினை மற்றும் தேற்றுதலுக்கான வெளிநாட்டு உதவித் திட்டங்களை ஆரம்பித்தலும் ஒருங்கிணைத்தலும்
  2. அப் பொறுப்பை நேரத்திற்கு நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சுகள், அரச அதிகாரிகள் மற்றும் முகவர்கள், தனியார் துறை முகவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொருத்தமான முகவர்களுடன் இணைந்து செயற்படல்
  3. இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களுடன் தொடர்பான நிவாரண செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும் முகாமை செய்தலும்
  4. இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்
  5. முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகள்
  6. அனர்த்த முகாமைத்துவம், நிவாரணம் வழங்கல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக நலன்புரி முகவர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்
  7. பின்வரும் விடயங்கள் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக நலன்புரி முகவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான களத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் கண்காணிப்பதற்கும் நாடு முழுவதும் அமைச்சுகள், திணைக்களங்கள், பொதுக் கூட்டுத்தாபனங்கள், மாகாண சபை, உள்ளூராட்சி அதிகார நிர்வாகம் மற்றும் மாவட்ட, பிரதேச, கிராம சேவகர் பிரிவு நிர்வாகம் போன்றவற்றினூடாக உதவிகளை வசதிப்படுத்துதல்
    • ஆபத்து வரைபடம் மற்றும் இடர் மதிப்பீடு
    • தகவல் முகாமைத்துவம்
    • அனர்த்தத் தணிப்பு
    • முன்கூட்டிய எச்சரிக்கைகளை பிரித்துத் தருதல்
    • அனர்த்த நிலைகளில் சிறப்பான எதிர்வினைக்கான ஆயத்தமாயிருத்தல்
    • அவசர நடவடிக்கை முகாமைத்துவம்
    • அனர்த்தமொன்றின் பின்னர் அனர்த்தத்திற்கு பிந்திய நடவடிக்கைகளின் முகாமைத்துவம்

அவசர தொடர்புகள்

117
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052