தேசிய அவசர நடவடிக்கை நிலையத்தின் கடமைகளும் பொறுப்புகளும்

அனர்த்தத்தின் போது அனர்த்தத்தின் பாதகமான விளைவுகளைக் குறைப்பதற்காக அனைத்து பொறுப்பான முகவர்களுடனும் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள தேசிய அவசர நடவடிக்கை நிலையம் தாபிக்கப்பட்டது. இந்நிலையம் காவற்றுறையுடனும் இராணுவத்துடனும் 24 மணிநேரமும் இணைந்து பணியாற்றுகின்றது.

அவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கைப் பிரிவின் பிரதான நடவடிக்கைகள்

  • தேசிய, மாவட்ட, பிரதேச, சமூக மட்டங்களில் நியம செயற்பாட்டு நடைமுறைகளை விருத்தி செய்தல்
  • தேசிய அவசர நடவடிக்கை திட்டத்தை தயாரித்தல்
  • பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச முகவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களை சரிபார்த்தலும் ஆய்வுசெய்தலும்
  • ஏதுநிலை சமூகத்திற்கு தகவல்களை பரப்புதல் மற்றும் முன்னெச்சரிக்கையை வழங்கல்
  • உடனடி நிவாரண மற்றும் மருத்துவ உதவிகளை ஒருங்கிணைத்தல்
  • தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் வெளியேற்றும் பணிகளையும் ஒருங்கிணைத்தல்
  • அவசர நடவடிக்கைக் குழுக்களை அமைத்தல்
  • அவசர நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள்ஃசர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் ஏனைய பங்காளர்களுடனும் ஒருங்கிணைப்பில் ஈடுபடல்
  • ஆயுதப்படைகள், கரையோரக் காவற்றுறை மற்றும் காவற்றுறையினருடன் எச்சரிக்கை மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்
  • பல்வேறு முகவர்களுடன் வளங்களைத் திரட்டுதல்
  • அவசர நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்தல்
  • கொள்வனவு செயன்முறையை செயற்படுத்தல்
  • அவசர எதிர்வினை குழுக்களை தாபித்தல்
  • அவசர நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், ஏனைய பங்காளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தல்
  • ஆயுதப்படைகள், கரையோரக் காவற்றுறை மற்றும் காவற்றுறையினருடன் எச்சரிக்கை மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்
  • பல்வேறு முகவர்களுடன் வளங்களைத் திரட்டுதல்
  • அவசர நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்தல்
  • கொள்வனவு செயன்முறையை செயற்படுத்தல்
  • தரவுகளை சேகரித்தலும் தினமும் 0900 மணிக்கும் 1200 மணிக்கும் 1800 மணிக்கும் நாளாந்த நிலைமை அறிக்கைகளை வழங்கல்

அவசர தொடர்புகள்

117
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052