13.05.2005 தினத்திலிருந்து அமுலாகும் 2005 இல.13 இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையமானது (DMC) 01.08.2005 இல் தாபிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவை (NCDM) மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகிய இரண்டு முக்கியமான நிறுவனங்களைத் தாபிக்க வேண்டிய தேவை இருந்தது. அனர்த்த முகாமைத்துவ நிலையமானது தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையின் வழிநடத்தலின்படி செயற்படுகின்ற நாட்டில் அனர்த்த இடர் முகாமைத்துவத்துக்கான பிரதான முகவர் நிறுவனமாகும். 2006 ஜனவரியில் மேற்குறிப்பிட்ட அமைச்சானது அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையானது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை நிர்வகிக்கின்ற அமைப்பாகும்.
தேசியப் பேரவையின் கட்டமைப்பு