rss

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கை நிலையத்தில் இறுதிநேர முன்னெச்சரிக்கை அமைப்புகளுக்கான பல்-பங்காளர்களின் ஈடுபாட்டின் தற்போதைய நிலை

35,000 உயிர்களைக் காவுகொண்ட, இருபதில் ஒருவரை இடம்பெயரச் செய்த 2004 ம் ஆண்டின் இந்துசமுத்திர சுனாமி அனர்த்தமானது  இலங்கைக்கான திறனான தேசிய முன்னெச்சரிக்கை அமைப்புக்கான (NEWS:SL) முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தியது. இத்தேவையை பூர்த்தி செய்வதற்கு, சமீபத்தில் அடிக்கடி ஏற்பட்ட இரு அனர்த்தங்களான 1978 சூறாவளி மற்றும் 2003 வெள்ளத்தின் பின்னர் கலந்துரையாடப்பட்ட விடயங்களை இனியும் பிற்போட இயலாது. பொதுமக்கள் எச்சரிக்கை என்பது ஆபத்து ஒன்றின் அடையாளம் காணல், கண்டறிதல், மற்றும் இடர் மதிப்பீடு, ஆபத்திலுள்ள மக்களின் ஏதுநிலையின் துல்லியமான  அடையாளம் காணல் மற்றும் இறுதியாக ஏதுநிலை சமூகத்திற்கு போதுமான நேரத்தில், ஆபத்து தொடர்பான தகவல்களை தொடர்பாடல் செய்தல் மற்றும் தெளிவூட்டல் ஆகியவற்றை கொண்ட ஒரு தொகுதி. எனவே அவர்கள் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உதவும். எச்சரிக்கையானது ஆபத்துகள் அழிவுகளாக மாறுவதை தடுப்பதற்கு பொதுமக்களுக்கு உதவும். திறனான பொதுமக்கள் எச்சரிக்கையானது உயிர்களைக் காத்தல், பொருளாதார இழப்புகளைக் குறைத்தல், அதிர்ச்சிகள் மற்றும் சமூக இடையூறுகளைக் குறைத்தல் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தல் மற்றும் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். இது சிறப்பான பொருளாதாரத்தின் அடித்தளத்திற்கான முக்கியமான பகுதியாகும். திறனான எச்சரிக்கை என்பது தணித்தல், தயார்நிலை, எதிர்வினை மற்றும் மீட்பு உள்ளடங்கியதான விரிவான இடர் முகாமைத்துவத் தொகுதி என்பதை அடையாளம் கண்டு கொள்ளும். எச்சரிக்கையானது முழுதான இடர் முகாமைத்துவத் தொகுதியின் முக்கியமான, ஆனால் 2004 இந்துசமுத்திர சுனாமியின் போது தோற்றுப்போன கூறாகும்.

அனர்த்த முகாமைத்துவ நிலையமானது பொருத்தமான தொழினுட்ப முகவர்கள், மற்றும் தொழினுட்ப குழுக்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கையை ஒருங்கிணைத்தல், அதை இறுதித்தூரம் வரை பரப்புவதை உறுதிப்படுத்தல் போன்றவற்றிற்கான பிரதான குவியப் புள்ளியாகும். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கை நிலையமானது இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் ஆபத்துகளுக்கு பொறுப்பான அனைத்து தொழினுட்ப முகவர்களுடன் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பில் ஈடுபடுவதுடன் ஏதாவது அனர்த்தம் நெருங்கி வருகையில் உபதேசிய மட்டத்திற்கும் சமூகங்களுக்கும் முன்னோக்கிய தொடர்பாடலை மேற்கொள்வதற்காக பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கும். அனர்த்த முகாமைத்துவ நிலையமானது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கை நிலையத்தினூடாக இயற்கை, தொழினுட்ப மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களுக்கான திறனான முன்னெச்சரிக்கை அமைப்பொன்றை தாபித்துள்ளது. அவ்வாறான அனர்த்தங்களான ஆற்று வெள்ளங்கள், மண்சரிவுகள், திடீர் வெள்ளங்கள், சூறாவளிகள், புயல்ஃகடல் கொந்தளிப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும். அதேவேளை அரிதான, ஆனால் பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆபத்துகளான சுனாமி போன்றவற்றுக்கான அமைப்புகளும் உண்டு. பல்வேறு ஆபத்துகளின் வெவ்வேறு குணவியல்புகள் காரணமாக வரவிருக்கும் அனர்த்த நிகழ்வுகள் குறித்த தகவல்கள் சேகரிப்பதும் முன்னெச்சரிக்கையை வழங்குவதும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபாடும். உள்ளூர் ஆபத்துகளான வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பாக ஏற்கனவே அமுலிலுள்ள உள்ளூர் தொகுதிகள் பலப்படுத்தப்படும். ஏனைய ஆபத்துகளான நிலநடுக்கம், சுனாமிகள், பாதகமான வானிலை நிலைமைகள், மற்றும் புயல்களுக்கு பொருத்தமான முகவர்கள் உரிய பிராந்திய மற்றும் சர்வதேச எச்சரிக்கை நிலையங்களுடன் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பில் செயற்படுவர்.

  • முன்னெச்சரிக்கை கோபுரங்களையும் மற்றும் ஏனைய முன்னெச்சரிக்கை பரப்பும் உபகரணங்களையும் பராமரித்தலும் இயக்குதலும்
  • முன்னெச்சரிக்கையை பரப்புதலும் அவை அதிக தூரத்திலுள்ள ஏதுநிலை கிராமத்தவர்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தலும்
  • முன்னெச்சரிக்கைக்கான தொழினுட்ப முகவர்களின் திறனளவைப் பலப்படுத்துவதற்காக நன்கொடை உதவிகளை ஒருங்கிணைத்தல்
  • குறித்த நடவடிக்கை பிரதேசத்தில் மூலோபாயத்தையும் கொள்கையையும் உருவாக்கல்
  • பல்வேறு முகவர்கள் மற்றும் பொதுமக்களிடையே முன்னெச்சரிக்கையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வை ஆரம்பித்தல்
  • மாகாண/மாவட்ட, உள்ளூராட்சி, பிரதேச, கிராம அதிகாரி மற்றும் சமூக மட்டங்களில் உள்ள அனர்த்த முகாமைத்துவ அலகுகளை முன்னெச்சரிக்கை பரப்புதலுடன் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் வழிகாட்டல்.
  • பல்வேறு ஆபத்துகளை எதிர்வுகூறுவதற்கு பொறுப்பான உள்ளூர் தொழினுட்ப முகவர்களுடன் ஒருங்கிணைப்பை தாபித்தல்.
  • தொழினுட்ப முகவர்களிடமிருந்து அவசர நடவடிக்கை நிலையத்திற்கும் அவசர நடவடிக்கை நிலையம் ஊடாக மாகாண/மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளுக்குமான (தொலைபேசி, வானொலித் தொடர்பு போன்ற) நம்பகரமான தொடர்பாடல் அமைப்பைத் தாபித்தல்
  • ஊடகங்களுடனும் அமைப்பொன்று தாபிக்கப்பட்டு அவற்றினூடாக தகவல்கள் பரப்பப்படுவதை உறுதிப்படுத்தல்
  • விசேடமாக விரைவாக ஆரம்பிக்கும் அனர்த்தங்களின்போது முன்னெச்சரிக்கைக்கு பயன்படுத்தப்படும் தொடர்பாடல் முறைமை மற்றும் எவ்வகையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பதில் சமூகத்திடையேயும் அனைத்து சம்பந்தப்பட்ட முகவர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தல்.

இலங்கையில் தற்போது மேற்குறிப்பிடப்பட்ட பல்வேறு அனர்த்தங்கள்/ஆபத்துகள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கு பல முகவர்கள் உள்ளனர். பெரும்பாலான அனத்தங்களுக்கு அவர்களின் நிபுணத்துவத்தினுள் அடங்குபவற்றிற்கு, அனர்த்தங்களை கண்காணிப்பதற்கு சட்டபூர்வமான ஆணை வழங்கப்பட்ட ஒரு அரச நிறுவனம் இருக்கும். உதாரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை சம்பந்தமான அனர்த்தங்களான சூறாவளி, சுனாமி போன்றவற்றிற்கு பொறுப்பாகும் அதேவேளை நீர்ப்பாசனத் திணைக்களம் ஆற்று வெள்ளங்களுக்கு பொறுப்பானதாகும்.

தேசிய மட்டத்திலிருந்து மாவட்ட/பிரதேச/உள்ளூராட்சி/கிராம அதிகாரி மட்டங்களுக்கான அல்லது ஏனைய அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட அமைவிடங்களுக்கான தற்போதைய தொடர்பாடல் அமைப்பு முறையானது பிரதானமாக காவற்றுறை மற்றும் இராணுவ தொடர்பாடல் தொகுதிகள், வானொலித் தொடர்பாடல், பல்-அனர்த்த முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள், ஊடகங்கள் மற்றும் சாதாரண தொலைபேசி அமைப்பு முறையூடாக மேற்கொள்ளப்படுகின்றது. நாடுபூராகவும் மாற்றீட்டு தொடர்பாடல் அமைப்பு ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ளதுடன் இந்த முன்னேற்றங்களுடன் அனர்த்த முகாமைத்துவ நிலையம், ஏதுநிலை சமூகத்திற்கு உடனடியாக அறிவிப்பதற்கான பொறிமுறை இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. இதில் நாடுபூராவுமான அவசர தொடர்பாடல் அமைப்பு அடங்குவதுடன் இது பின்வருவன குறித்த தகவல் வழங்க பயன்படுத்தப்படும்.

  • வரவிருக்கும் புயல்கள், வெள்ளங்கள், மண்சரிவுகள், தொற்றுநோய்கள், கடல் கொந்தளிப்புகள், சுனாமி மற்றும் சூறாவளிகள் போன்றன
  • அணைக்கட்டு உடைத்தல், வான்கதவுகளின் சடுதியான திறப்பு, அணைக்கட்டு மற்றும் நீர்த்தேக்கம் தொடர்பாக வரவிருக்கும் வெள்ளங்கள்
  • அடையமுடியாத மூழ்கடிக்கப்பட்ட பிரதேசங்கள், மூடப்பட்ட பாதைகள் மற்றும் பாலங்கள் மற்றும் வெளியேறும் வழி, பாதுகாப்பான பிரதேசங்கள் போன்றன.

IOTWS என்பது சுனாமி முன்னெச்சரிக்கைக்கான பிரதான எச்சரிக்கை நிலையமாகும். INCOISE, Aus MET மற்றும் இந்தோனேசிய வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியன அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்திற்கும் மேலதிக தொழினுட்ப தகவல்களை வழங்குவதில் இணைந்து செயற்படுகின்றன. தேசிய மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையான முன்னெச்சரிக்கைகளுடன் பல முறைகள் இணைக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையமானது தேசிய மட்டத்தில் காவற்றுறை மற்றும் முப்படையினருடன் அவர்களின் சொந்த தொடர்பாடல் உபகரணங்களுடன் பலப்படுத்தப்பட்டுள்ளது.

  • ஊடகங்கள்
  • முன்னெச்சரிக்கை கோபுரங்கள்
  • காவற்றுறை மற்றும் முப்படை தொடர்பாடல்
  • அலைபேசி/குறுஞ்செய்தி
  • அரசாங்க உள்ளக வலையமைப்பு
  • செய்மதி மற்றும் வானொலித் தொடர்பாடல்
  • தொலைபேசிகள், அலைபேசிகள் (CDMA/ GSM)
  • வானொலித் தொடர்பாடல்
  • தொலைபேசிகள், தொலைநகல், அலைபேசிகள்
  • காவற்றுறை மற்றும் இராணுவ தொடர்பாடல் ஊடகங்கள்
  • தொலைபேசிகள், அலைபேசிகள் (CDMA/ GSM)
  • காவற்றுறை வாகனங்கள் - அறிவித்தல்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள்
  • பொது அறிவித்தல் முறைகள்
  • சைரன்கள் (கை மற்றும் மின்)
  • கோவில் மற்றும் தேவாலய மணிகள்
  • துவிச்சக்கர வண்டி/ மோட்டார் சைக்கிள்/தூதர்கள்
  • அலைபேசி/குறுஞ்செய்தி
  • முன்னெச்சரிக்கை கோபுரங்கள்
  • ஊடகங்கள்
  • பாரம்பரிய மற்றும் சமய முறைகள்
  • முன்னெச்சரிக்கை குழுக்கள் (வீடு வீடாக)

மேற்குறிப்பிட்ட அமைவிடங்களிலிருந்து (மாவட்ட/பிரதேச/உள்ளூராட்சி/கிராம அதிகாரி மட்டங்களுக்கள் அல்லது ஏனைய அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட அமைவிடங்கள்) சமூகத்திற்கான பரப்புகை பின்வரும் பல்வேறு வசதிகள் மூலம் மேற்கொள்ளப்படும்: ஆளணி மற்றும் உள்ளூராட்சி உத்தியோகத்தர்கள் போன்ற முகவர்கள், கிராம அதிகாரிகள், உள்ளூர் காவற்றுறை, சமூக மட்ட அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், இராணுவம், காவற்றுறை மற்றும் தொண்டர்கள் பரப்புகை நடவடிக்கையில் ஈடுபடுவர். அமைவிடங்களுக்கான விசேட குணவியல்புகளுக்கு ஏற்ப முறைகளின் திறனானது வெவ்வேறு இடங்களில் வித்தியாசப்படும்.

கடந்த இரு தசாப்தங்களாக இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்கள் காரணமாக ஏற்பட்ட துன்பங்கள் காரணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் புதிய விடயமொன்று உரையாடப்பட்டது. அனைத்து ஊடகங்களையும் உபயோகித்து திறனான தொடர்பாடல் மூலம் உயிர்களுக்கும் சொத்துக்களுக்குமான இழப்புகளை சாத்தியமான உச்ச அளவுக்கு குறைப்பதற்கு முடியுமென பொதுவாக உணரப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் ஊடகப் பேச்சாளர் மற்றும் ஊடக அணியொன்றை நியமித்தல் மூலம் 24 மணிநேரமும் ஊடக ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது.

  • அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுடன் ஒருங்கிணைப்பும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கைகள் மற்றும் தகவல்களை வழங்குதலும்
  • அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அனர்த்த நிலைமைகள் மற்றும் விசேட நிகழ்வுகள் தொடர்பாக ஊடக சந்திப்பை மேற்கொள்ளல்
  • தேவைக்கேற்பவும் நிலைமைகளை விளக்கவும் தேவையான ஊடக அறிக்கைகளை தயாரித்தல்
  • தேசியரீதியாகவும் உள்ளூரிலும் ஊடகங்களுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல்

(NEWS:SL)

News & Events

அவசர தொடர்புகள்

117
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052