இலங்கை அரசாங்கம் நாட்டிலுள்ள அனர்த்த இடர் முகாமைத்துவத்துக்கான சட்டபூர்வ மற்றும் நிறுவனரீதியான ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதற்காக பின்வரும் படிமுறைகளை எடுத்துள்ளது.
2005 மே மாதத்தில் 2005 இல.13இலான அனர்த்த முகாமைத்துவ சட்டம் இயற்றப்பட்டது. இது நாட்டில் அனர்த்த இடர் முகாமைத்துவ தொகுதிக்கான சட்ட அடிப்படையை வழங்குகிறது. இந்த சட்டமானது ஜனாதிபதியால் தலைமை தாங்கப்படுவதும், பிரதமர் உபதலைவராகவும், எதிர்க்கட்சி, சிறுபான்மை சமூகம் மற்றும் மாகாண முதலமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையை தாபித்தது. இந்த உயர்மட்ட மேற்பார்வை அமைப்பு, நாட்டில் அனர்த்த இடர் முகாமைத்துவத்திற்கு வழிகாட்டுகிறது.
சட்டத்தில் குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தாபிக்கப்பட்டது.
சட்டத்தைப் பதிவிறக்க,